Published:Updated:

கொரோனாவால் இந்தியாவில் 235 பத்திரிகையாளர்கள் இறப்பு; மத்திய மாநில அரசுகள் என்ன செய்யவேண்டும்?

கொரோனாவிற்கு பலியாகும் பத்திரிகையாளர்கள்
கொரோனாவிற்கு பலியாகும் பத்திரிகையாளர்கள்

இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்து சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் கொரோனாவால் 4 பத்திரிகையாளர்கள் பலியாகிறார்கள் என Press Emblem Campaign அமைப்பின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 235க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இறந்திருக்கிறார்கள் என Network for Women in Media, India அமைப்பு பட்டியல் வெளியிட்டிருக்கிறது. மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள் போன்று பத்திரிகையாளர்களும் கொரோனா ஊரடங்கிலும் வேலை பார்க்கலாம். எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை என அரசு அறிவித்திருந்தது. ஆனால், அவர்களுக்கு முன்களப் பணியாளர்களுக்குரிய எந்தச் சலுகைகளும் வழங்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களாக அங்கீகரிக்கப்படவே இல்லை எனத் தெரிவித்திருக்கிறது NWMI அமைப்பு.

பத்திரிகையாளர்கள்
பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை, தடுப்பூசி அளிக்கும் போது முன்களப் பணியாளர்களுக்கு முதலில் அளிக்கப்பட்டதைப் போலப் பத்திரிகையாளர்களுக்கு எந்த வித சலுகையும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டுமே பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்து சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன. நாடு முழுவதும் அவ்வாறு அங்கீகரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறது NWMI அமைப்பு.

கங்கையில் மிதக்கும் கொரோனா  பிணங்கள்... பழிபோடும் பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்கள்!
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

அந்த அமைப்பானது மத்திய மாநில அரசுகள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கும் சில கோரிக்கைகளை விடுத்துள்ளது. பத்திரிகையாளர்களின் உடல் நலனிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்யுங்கள், அவர்களையும் முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்து தடுப்பூசி செலுத்துவதில் சலுகை கொடுங்கள், தேவை எனில் மட்டும் வெளியில் சென்று செய்தி சேகரிக்க அறிவுறுத்துங்கள் மற்றும் அலுவலகம் வந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள், எனச் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளது NWMI அமைப்பு.

அடுத்த கட்டுரைக்கு