கெஜ்ரிவாலை கடத்த தீவிரவாதிகள் திட்டம்! | Kejrivalai militants plan to kidnap!

வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (20/01/2014)

கடைசி தொடர்பு:09:17 (20/01/2014)

கெஜ்ரிவாலை கடத்த தீவிரவாதிகள் திட்டம்!

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடத்த இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாள எல்லையில் கைது செய்யப்பட்ட அந்த இயக்கத்தைச் சேர்ந்த யாசீன் பட்கலை விடுவிக்கச் செய்யும் முயற்சியாக கெஜ்ரி்வால் கடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து, இதுகுறித்து கெஜ்ரிவாலிடம் டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் நேரில் விளக்கிக் கூறியதுடன், அவரை இசட் பிரிவு பாதுகாப்பை ஏற்குமாறு அறிவுறுத்தினர். எனினும், இதற்கு கெஜ்ரிவால் என்ன பதில் தெரிவித்தார் என தெரியவில்லை.

அரசியல் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கலாச்சாரத்தை ஆம் ஆத்மி கட்சி எதிர்த்து வரும் நிலையில், அத்தகைய பாதுகாப்பை ஏற்க கெஜ்ரிவால் ஏற்கனவே மறுத்துள்ளார்.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதான குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தீவிரவாதி யாசீன் பட்கலிடம் விசாரணை நடத்த, தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் கர்நாடக காவல்துறையினருக்கு கடந்த 17ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதனிடையே, அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் முயற்சியாக, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கடத்திச் செல்ல இந்தியன் முஜாஹிதீன் இயக்கம் திட்டமி்டடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்