தேர்தல் கூட்டணி: சோனியா காந்தி ஆலோசனை | Electoral alliance: Sonia Gandhi consultation

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (24/01/2014)

கடைசி தொடர்பு:10:30 (24/01/2014)

தேர்தல் கூட்டணி: சோனியா காந்தி ஆலோசனை

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திக்விஜய் சிங், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகளை, கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என அவர்கள் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

கூட்டணி குறித்து முடிவு செய்யும் குழுவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமை தாங்குகிறார்.

தெலங்கானா மசோதா குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜிவாலா, கூட்டணி குறித்து விரைவில் இறுதி செய்யப்படும் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்