பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு பத்மஸ்ரீ விருதா?: பெண்கள் ஆணையம் எதிர்ப்பு!

கொல்கத்தா: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதா? என்று மேற்கு வங்க பெண்கள் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

கடந்த வருடத்திற்கான பத்மஸ்ரீ விருதை மேற்கு வங்கத்தை சேர்ந்த புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழக துணைவேந்தரான சுஷாந்தா தத்தாகுப்தாவுக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது. ஆனால், சுஷாந்தா பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பதால் அவருக்கு வழங்க உள்ள விருதினை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மாநில பெண்கள் ஆணையம், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறையிட்டுள்ளது.

ஆனால் சுஷாந்தாவோ, தம் மீது பொறாமை கொண்ட அதிருப்தி பல்கலைக்கழக ஊழியர்கள் தவறாக, கீழ்த்தரமாக செயல்பட்டு தமது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயல்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

சுஷாந்தா தத்தாகுப்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள விருது ரத்து செய்யப்படுமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!