ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை ஆம் ஆத்மியில் இணைந்தார்! | Former hockey team captain Dhanraj Pillai joined Aam Admi!

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (18/02/2014)

கடைசி தொடர்பு:20:35 (18/02/2014)

ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை ஆம் ஆத்மியில் இணைந்தார்!

புதுடெல்லி: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, இன்று ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அத்துடன், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்திலும் அவர் ஈடுபட உள்ளார்.

நாட்டின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினைப் 1999-2000ஆம் ஆண்டில் பெற்ற தன்ராஜ் பிள்ளை, 2000ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 2002ல் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்