வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (20/02/2014)

கடைசி தொடர்பு:08:56 (20/02/2014)

7 பேர் விடுதலை அரசியல் நோக்கோடு எடுக்கப்பட்ட முடிவு: காங்கிரஸ்

புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில், 7 பேரை விடுவிப்பது என்பது முழுக்க அரசியல் நோக்கோடு, பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட முடிவு என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்றம் மூன்று பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய மட்டுமே உத்தரவிட்டது. தமிழக அரசோ எஞ்சிய நான்கு பேரின் ஆயுள் தண்டனைகளையும் குறைத்து அவர்களை விடுவிக்க முடிவு செய்திருக்கிறது. இது முழுக்க அரசியல் நோக்கோடு, பிரிவினைவாத சக்திகளின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட முடிவு.

இந்த முடிவின் மூலம் தமிழக அரசு குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்துவிட்டது. மற்ற மாநில முதலமைச்சர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் சட்டத்தை மீறி இதுபோன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற முடிவுகளை எடுப்பதற்கு இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்'' எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்