Published:Updated:

`சீனாவிலிருந்து பரவிய ஸ்வைன் ஃப்ளூ; உயிரிழந்த 2,500 பன்றிகள்’ - அச்சத்தில் அஸ்ஸாம் விவசாயிகள்

பன்றிகள்
News
பன்றிகள்

ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூவானது வளர்ப்பு மற்றும் காட்டுப் பன்றிகளை கடுமையாகப் பாதிக்கக்கூடிய நோய் என World Organisation for Animal Health கூறியுள்ளது. பன்றிகளின் ரத்தம், எச்சில், திசுக்கள் மூலமாகவும் இந்த நோய் பரவும் எனக் கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்களும் இந்த வைரஸுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கின்றன.

பன்றி
பன்றி

இந்த நிலையில், அஸ்ஸாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ என்று கூறப்படும் பன்றிக் காய்ச்சலானது பன்றிகளைப் பாதித்து கொன்று குவித்துவருகிறது. அம்மாநிலத்தில் உள்ள 306 கிராமங்களில் இதுவரை சுமார் 2,500 பன்றிகள் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பன்றிகள்
பன்றிகள்
Represent image

இதுதொடர்பாக அம்மாநிலத்தின் கால்நடைகள் துறை அமைச்சர் அதுல் போரா பேசுகையில், ``கொரோனா வைரஸுக்கும் ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இந்த நோய் கண்டறியப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உள்ள ஜிசாங் எனும் பகுதியிலிருந்து இந்த வைரஸ் பரவியுள்ளது. முதலில் அருணாசலப் பிரதேசத்தில் இந்தக் காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தற்போது அஸ்ஸாமில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றி கண்காணிப்பு மண்டலத்தை உருவாக்கியுள்ளோம். பன்றிகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து சோதனை நடத்தி வருகிறோம். பன்றிகளைக் கொல்லாமல் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், 2019-ம் ஆண்டு கால்நடைகளின் கணக்கெடுப்பின்படி பன்றிகளின் மொத்த எண்ணிக்கை 21 லட்சம் என்றும் தற்போது 30 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூவானது வளர்ப்பு மற்றும் காட்டுப் பன்றிகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய நோய் என World Organisation for Animal Health கூறியுள்ளது. பன்றிகளின் ரத்தம், எச்சில், திசுக்கள் மூலமாகவும் இந்த நோய் பரவும் என கூறப்படுகிறது. இந்த நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமான பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியைப் பயன்படுத்த கால்நடைகள் துறை அறிவுறுத்தியது. ஆனால், மருத்துவர்களின் மூலமாக இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதால் அதுவும் நிறுத்தப்பட்டது. மேலும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும், பன்றிகளை வளர்க்கும் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.