மும்பை தொடர் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகள் யாசின் பத்கல், அக்தருக்கு நீதிமன்ற காவல்! | Mumbai serial blasts: judicial custody for militants Yassin patkal and Akhtar

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (01/03/2014)

கடைசி தொடர்பு:12:00 (01/03/2014)

மும்பை தொடர் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகள் யாசின் பத்கல், அக்தருக்கு நீதிமன்ற காவல்!

மும்பை: மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகள் யாசின் பத்கல் மற்றும் அக்தருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. இதில் 21 பேர் பரிதாபமாக பலியானார்கள். 141 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து, இந்தியன் முகாஜூதின் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாசின் பத்கல் மற்றும் அக்தர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.

இந்நிலையில், தீவிரவாதிகள் யாசின் பத்கல் மற்றும் அக்தர் மும்பை மோக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம், கைதானவர்களிடம் தீவிரவாத தடுப்பு படையினர் அடையாள அணிவகுப்பு மேற்கொள்ள விரும்புவதாக கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதி யாதின் டி.ஷிண்டே, 2 பேரையும் வருகின்ற 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும், கைதான நபர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை தானே சிறையில் அடைக்க கோரி அரசு தரப்பு வழக்கறிஞர் மனு செய்தார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்