சந்திரசேகரராவ், விஜயசாந்தி எம்.பி. பதவி ராஜினாமா!

ஐதராபாத்: ஜூலை.5,2011: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி சந்திரசேகரராவ், நடிகை விஜயசாந்தி எம்.பி. ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர்

இதுகுறித்து ஐதராபாத்தில் சந்திரசேகரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
எங்களது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தெலுங்கானா தனி மாநிலத்திற்காக உருவானது. நான் இதுவரை தனிமாநில கோரிக்கைக்காக 2 தடவை எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளேன். அப்படிப்பட்ட என்னைப் பார்த்து பதவியை ராஜினாமா செய்ய முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள்.
 
இதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். நானும் நடிகை விஜயசாந்தியும் ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி விட்டோம். அதை ஏற்றுக்கொள்ளும்படி டெல்லிக்கு நேரில் சென்றும் வலியுறுத்துவோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!