Published:Updated:

இத்தாலியிலிருந்து 263 இந்தியர்களுடன் நாடு திரும்பிய இரண்டாவது விமானம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய 263 இந்தியர்கள்
இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய 263 இந்தியர்கள்

இத்தாலியில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக பிரேத்யேக ஏஐ 1122 விமானம், 12 பேர் அடங்கிய விமானக் குழுவினருடன் டெல்லியிலிருந்து சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. விமானக் குழுவினர் அனைவருக்கும் பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போதுவரை உலகம் முழுக்க 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் வைரஸ் தொற்று காரணமாகத் தாயகம் நோக்கித் திரும்பிய வண்ணம் உள்ளனர். இதில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியிலிருந்து 263 இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Airport
Airport

இத்தாலியிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் அனைவரும் விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனிங் முடிந்த பின்னர் இந்தோ - திபெத் எல்லையான சாவ்லாவில் உள்ள குவாரன்டைன் சிகிச்சையிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இத்தாலியில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக பிரேத்யக ஏஐ 1122 விமானம், 12 பேர் அடங்கிய விமானக் குழுவினருடன் டெல்லியிலிருந்து சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. விமானக் குழுவினர் அனைவருக்கும் பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்பட்டன. இந்திய விமானம் ரோமிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிளம்பி இங்கு 10 மணிக்கு வந்தடைந்தது.

இத்தாலியிலிருந்து மீட்கப்படும் இரண்டாவது இந்தியக் குழு இது. இதற்கு முன்னர் மிலன் நகரிலிருந்து 218 இந்தியர்கள் மீட்கப்பட்டிருந்தனர். மத்திய அரசானது இத்தாலியில் மீதமுள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மற்றுமொரு விமானத்தை இயக்க வேண்டியிருக்கும்.

Indians from Italy
Indians from Italy

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இத்தாலியில் வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து, இறப்பு எண்ணிக்கை 6,600-ஐ தொட்டது. ஒரு நாளில் மட்டுமே 800-க்கும் மேற்பட்டோர் வைரஸால் உயிரிழந்தனர். இத்தாலியில் வைரஸால் ஏற்பட்ட உயிரழப்பு சீனாவைவிட அதிகமாகிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் இந்திய அரசாங்கம் கடந்த மார்ச் 21 முதல் வணிக விமானங்கள் இந்தியா வரை தடை விதித்துள்ளது. மற்ற நாடுகளும் இதுபோல தடை விதிப்பதற்கு முன்னர் உலகில் பரவியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்க வேண்டியது அவசியம்.

Students from Italy
Students from Italy
`144 தடை உத்தரவு; மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகளுக்கு சீல்!’- முதல்வர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷவர்தன் ஸ்ரிங்க்லா பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியத் தலைமைப் பொறுப்பாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசினர். இதில் பல்வேறு நாட்டில் உள்ள இந்திய மக்களை பாதுகாப்பாக இந்தியாவுக்குக் கொண்டு வருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தியர்களை வெவ்வேறு நாடுகளிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு