சிறுவன் கொலை:ராணுவத்துக்கு தொடர்பில்லை-V.K.சிங் | சென்னையில் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவத்துக்கு தொடர்பில்லை என்று ராணுவத் தளபதி வி.கே.சிங் கூறியுள்ளார்.

வெளியிடப்பட்ட நேரம்: 05:29 (06/07/2011)

கடைசி தொடர்பு:05:29 (06/07/2011)

சிறுவன் கொலை:ராணுவத்துக்கு தொடர்பில்லை-V.K.சிங்

புதுடெல்லி, ஜூலை 6,2011

சென்னையில் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவத்துக்கு தொடர்பில்லை என்று ராணுவத் தளபதி வி.கே.சிங் கூறியுள்ளார்.

மேலும், இதில் ராணுவ அதிகாரிகள் எவருக்கேனும் தொடர்பிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும அவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்தச் சம்பவத்தில் ராணுவம் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறுவது தவறு.

சிறுவன் கொல்லப்பட்டது தொடர்பாக நடந்து வரும் விசாரணைக்கு ராணுவம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.

இதில், ஏதாவது அதிகாரிகள் சம்பந்தபட்டு இருக்கிறார்கள் என தெரிய வந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் வி.கே.சிங்.

முன்னதாக, சென்னைத் தீவுத்திடல் அருகேயுள்ள ராணுவக் குடியிருப்பு வளாகத்தில் சிறுவன் தில்சனை சுட்டுக் கொன்ற நபரை போலீஸாரிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்