வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (14/04/2014)

கடைசி தொடர்பு:12:47 (14/04/2014)

வாஜ்பாய்க்கு எழுதிய கடிதங்களை வெளியிடலாமா? மோடியிடம் கருத்து கேட்கிறது பிரதமர் அலுவலகம்!

புதுடெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எழுதிய கடிதங்களை வெளியிடலாமா, என்பது குறித்து குஜராத் அரசு மற்றும் மோடியின் கருத்தை பிரதமர் அலுவலகம் கோரியுள்ளது.

2002 குஜராத் கலவரம் தொடர்பாக வாஜ்பாய், நரேந்திர மோடி இடையே நடைபெற்ற கடித பரிமாற்றங்களின் நகல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பிரதமர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தை பிரதமர் அலுவலக தகவல் ஆணைய அதிகாரி நிராகரித்தார்.  இதையடுத்து, இதை எதிர்த்து பிரதமர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விண்ணப்ப தாரருக்கு பிரதமர் அலுவலக தகவல் ஆணைய அதிகாரி  அளித்துள்ள பதிலில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கடித நகல்களை வெளியிடுவது தொடர்பாக குஜராத் அரசு மற்றும் அந்த மாநில முதல்வரிடம் கருத்து கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்