Published:Updated:

24,000 ரேபிட் டெஸ்ட் கிட் திருப்பி அனுப்பப்படும்.. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #CoronaUpdate #NowAtVikatan

கொரோனா
கொரோனா

27-04-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Apr 2020 8 PM

ரேபிட் டெஸ்ட் கிட் திருப்பி அனுப்பப்படும்!

கொரோனா பரிசோதனைக்காக தமிழக அரசு வாங்கியுள்ள 24,000 ரேபிட் டெஸ்ட் கிட் திருப்பி அனுப்பப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். ICMR அறிவுரைப்படி அவை திருப்பி அனுப்பப்படும். இதனால் தமிழக அரசுக்கு எந்த செலவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

27 Apr 2020 6 PM

தமிழகத்தில் இன்று 52 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில், இன்று மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 24 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் இன்று மட்டும் 47பேர் கொரோனா நொய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது வரை சிகிச்சையில் 812பேர் உள்ளனர்

27 Apr 2020 4 PM

மாநில அரசுகளுக்கு ICMR அறிவுறுத்தல்!

ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. மேலும் RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லியுள்ளது.

27 Apr 2020 3 PM

1,000 கோடி ரூபாயை வழங்குங்கள்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இன்று மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் மத்திய அரசு உடனடியாக தமிழகத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்திருக்கிறார். ``தமிழகத்துக்கு உடனடியாக 1000 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். சிறு, குறு தொழிலாளர்கள் ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரியை கட்ட 6 மாத கால கூடுதல் அவகாசம் தர வேண்டும்” என அவர் தனது கோரிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

27 Apr 2020 1 PM

30 லட்சத்தைக் கடந்த எண்ணிக்கை!

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உலக அளவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,03,352 ஆக இருக்கிறது. இதில் 2,07,094 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். 8,82,552 பேர் அதிலிருந்து மீண்டுள்ளனர்.

27 Apr 2020 1 PM

முதல்வருக்காக நிறுத்திவைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்!

சென்னை தலைமைச் செயலகத்தில் பிரதமர் மோடியுடன் காணொலிக் காட்சியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகம் வந்தார். இதற்காக அவர் வரும் சாலையில் வாகனங்களை போலீஸார் நிறுத்தி வைத்தனர். அப்போது தலைமைச் செயலகம் அருகே அவசரமாகச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனமும் அத்தியாவசியப் பணிகளுக்காகச் சென்றவர்களும் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

27 Apr 2020 8 AM

மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர்!

லாக்டௌன் நிலவரம் மற்றும் கொரோனாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். காலை 10 மணிக்குக் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடைபெறுகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இது மூன்றாவது முறையாகும். மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அதற்குப் பின்னர் தளர்த்தப்படுவது மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர்களிடம் அவர் கருத்துகளைக் கேட்டறிவார் என்று தெரிகிறது.

`அம்மா உணவகமும் அ.தி.மு.க - தி.மு.க அரசியலும்!' - கொரோனா கும்மாங்குத்து அரசியல்
அடுத்த கட்டுரைக்கு