Published:Updated:

`தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து தப்பிய தொழிலாளர்கள்!’ - வலைவீசும் டெல்லி போலீஸ்

டெல்லி
டெல்லி ( AP )

டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து 27 தொழிலாளர்கள் தப்பியோடியதாக அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் லாக்டௌன் மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றாத சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வெளிவருகின்றன. இதேபோன்று, டெல்லியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து சில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தப்பி ஓடியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி
டெல்லி
AP

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்த வீடியோவில், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் தங்க வைக்கபட்டிருந்த ஒரு அரசு பள்ளியின் வாசலில் ஏறி சிலர் ஓடுவது பதிவாகியுள்ளது. இந்தப் பள்ளி டெல்லி அரசால் தனிமைப்படுத்தப்பட்ட மையமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மேற்கு டெல்லியின் திலக் நகரில் உள்ள தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 27 பேர் தப்பியுள்ளதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். திங்களன்று 56 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பஞ்சாபி பாக் அரசுப் பள்ளியிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட சர்வோதய பால் வித்யாலயாவுக்கு மாற்றப்பட்டனர். அங்கு ஏற்கெனவே ஒரே ஒரு புலம்பெயர்ந்தவர் தங்கியிருந்தார்.

டெல்லி
டெல்லி
AP

புதிதாக வந்தவர்களில் ஒருவரான கல்லு என்பவர், மற்றவர்களை தவறாக வழிநடத்தியதால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், 57 பேரும் தங்குமிடத்தை விட்டு அத்துமீறி வெளியேறியுள்ளனர். அவர்களில் 30 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மீண்டும் தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள 27 பேரை போலீஸ் அதிகாரிகள் தேடி வருவதாகத் தெரிவித்தனர். தங்குமிடத்தின் பொறுப்பாளர் முஸ்தக் அலி அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு