கல்லூரிகளுக்கே சென்று வங்கிக்கடன்: கனரா வங்கி அறிவிப்பு

சேலம்: நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நேரிடையாக சென்று வங்கிக் கடன் வழங்கப்படும் என்று கனரா வங்கித் தலைவர் துபே அறிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், உரிய ஆவணங்கள் இருந்தால் அனைத்துவித கடன்களும் கனரா வங்கியில் கிடைக்கும் என்றார்.

மேலும், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த சேலத்தில் தனி வங்கி தொடங்கப்படும் என்றும் துபே கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!