மோடி அரசுக்கு எதிராக தெலங்கானாவில் முழு அடைப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவின் சில பகுதிகளை அவசரச்சட்டம் மூலம் சீமாந்திராவுடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் முழு அடைப்பு நடந்து வருகிறது.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் நடந்து வரும் முழு அடைப்பு காரணமாக ஹைதராபாத், கரீம்நகர், கம்மம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தெலங்கானாவில் உள்ள கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களை போலாவரம் நீர்பாசனத்திட்டத்திற்காக சீமாந்திராவுடன் இணைக்க மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளதாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!