ராகுல் ஒரு ஜோக்கர்: கேரள காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம் | Rahul is a Joker: Kerala Congress leader strong criticism

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (29/05/2014)

கடைசி தொடர்பு:15:38 (29/05/2014)

ராகுல் ஒரு ஜோக்கர்: கேரள காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்

கொச்சி: "காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு ஜோக்கர்" என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் டி.ஹெச்.முஸ்தப்பா விமர்சித்துள்ளது அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.

இந்நிலையில், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் டி.ஹெச்.முஸ்தப்பா, ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

"ராகுல் காந்தி அவராக விலக வேண்டும்.  இல்லை என்றால் நீக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுலின் சகோதரி பிரியங்காவை நியமிக்க வேண்டும். ராகுல் காந்தி ஒரு ஜோக்கர் மாதிரி நடந்து கொள்கிறார். அதனால்தான் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

பிரதமர் பதவிக்கு போட்டி என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு இல்லை. இது மக்களுக்கு தெரியும். எனவே காங்கிரசுக்கு மக்கள் மோசமான தோல்வியை அளித்துள்ளனர். ராகுல்காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அப்படி செய்யவில்லை என்றால் பிரியங்கா காந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட வேண்டும்" என்று முஸ்தப்பா கடுமையாக விமர்சித்துள்ளார்.

முஸ்தப்பாவின் இந்த பேச்சு மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்