பாலியல் பலாத்காரம் செய்பவர்களை பொதுஇடத்தில் தூக்கிலிட உமா பாரதி வலியுறுத்தல்! | Uma Bharati emphasis to who raped put on the spot to hang!

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (31/05/2014)

கடைசி தொடர்பு:20:16 (31/05/2014)

பாலியல் பலாத்காரம் செய்பவர்களை பொதுஇடத்தில் தூக்கிலிட உமா பாரதி வலியுறுத்தல்!

புதுடெல்லி: பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை பொதுஇடத்தில் தூக்கில் போட வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 2 காவல்துறையினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் உமா பாரதி கூறுகையில், ''உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. பெண்கள் மீதான வன்கொடுமைகள், உத்தரபிரதேசத்தில் தொடர்ககையாக நடைபெற்று வருகின்றன.

இதுபோன்று பெண்கள் மீதான வன்கொடுமைகள் வழக்குகளை விரைவில் விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். மேலும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கில் போட வேண்டும்.

படான் சம்பவம் குறித்து, முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் கூறிய கருத்துகள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறுபவர்களும், குற்றவாளிகளுக்கு ஒப்பானவர்களே'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்