உட்கட்சி பூசல்: பூசி மெழுகும் கெஜ்ரிவால்! | My best friend yokentira Yadav: says Kejriwal!

வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (07/06/2014)

கடைசி தொடர்பு:15:52 (07/06/2014)

உட்கட்சி பூசல்: பூசி மெழுகும் கெஜ்ரிவால்!

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சி பூசலுக்கு காரணமான யோகேந்திர யாதவ் எனது சிறந்த நண்பர் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை அடைந்தது. இதையடுத்து, அக்கட்சியில் உள்ள பல தலைவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். சமீபத்தில், ஷாசியா இல்மி, கேப்டன் கோபிநாத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும், கட்சிக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கூறினர்.

இதற்கிடையே, அக்கட்சியின் முக்கிய  தலைவர்களான யோகேந்திர யாதவ் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு இடையே கடிதப் போர் ஏற்பட்டுள்ளது. இ-மெயில் மூலமாக இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து உட்கட்சி பூசல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவர்கள் கூட்டம்  இன்றும் 2வது நாளாக டெல்லியில் நடைபெற்றது.

இந்நிலையில், கட்சிக்குள் உட்கட்சிபூசல் இல்லை என்பதுபோல் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிநத் கெஜ்ரிவால் காட்டிக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால, ''யோகேந்திர யாதவ் எனது நெருங்கிய நண்பர். அவருடன் நீண்ட ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது அவர் சில முக்கிய விஷயங்களை கூறினார். அதுகுறித்து நாங்கள் அனைவரும் விரைந்து செயல்படுவோம். கட்சியில் இருந்து விலகிச் சென்ற ஷாசியா இல்மியை திரும்பப் கட்சியில் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்வோம்'' எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close