கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்! (படங்கள்) | Karnataka child fell into the well bore to recover the intensity!

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (18/06/2014)

கடைசி தொடர்பு:12:47 (18/06/2014)

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்! (படங்கள்)

பிஜாபூர்: கர்நாடக மாநிலம், பிஜாபூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பிஜாபூர் மாவட்டம், நாகதானா கிராமத்தில் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை நாய் துரத்தியுள்ளது. நாய்க்கு பயந்து ஓடிய குழந்தை, விளைநிலத்தில் தோண்டப்பட்டிருந்த 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது.

தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

50 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகில் மற்றொரு குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. 20 அடி ஆழம் வரை தோண்டியுள்ளதாகவும், தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கூடுதலாக அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஆழ்துளை கிணற்றுக்குள் அந்தக் குழந்தை தலைகீழாக விழுந்திருப்பதாக, கேமரா மூலம் கண்காணித்ததில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, குழந்தைக்கு தண்ணீர் கூட கொடுக்க முடியாத சூழல் நேரிட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், குழந்தைக்கு தொடர்ந்து பிராண வாயு வழங்கப்பட்டு வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்