சிகரெட், பான் மசாலா, குட்கா, எவர்சில்வர் பொருட்களுக்கான வரி உயர்வு! | tax hike for Cigarettes, pan masala, gutka, stainless steel products

வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (10/07/2014)

கடைசி தொடர்பு:13:37 (10/07/2014)

சிகரெட், பான் மசாலா, குட்கா, எவர்சில்வர் பொருட்களுக்கான வரி உயர்வு!

புதுடெல்லி: சிகரெட், பான் மசாலா, குட்கா, எவர்சில்வர் பொருட்கள் மீதான வரி 2014-15 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், இந்த பொருட்களின் விலை உயரும்.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2014-15 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், சிகரெட் மீதனா வரி 12 சதவிகிதத்தில் இருந்து 16 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இதன் விலை உயரும்.

சோடா பானங்களுக்கு கூடுதலாக 5 சதவிகிதம் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளதால், குளிர் பானங்களின் விலை மேலும் உயரும்.

இதேபோல், தொலைத் தொடர்பு உபகரணங்களுக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்