Published:Updated:

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு; 3 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு
News
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு

நீதிமன்றத்திலுள்ள ஒரு கழிவறையில் இந்த குண்டு வெடித்திருக்கிறது. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், பலத்த காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம், லூதியானாவிலுள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், மூன்று பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பஞ்சாப்பில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கு பல்வேறு அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன. சமீபத்தில், சீக்கிய மதச்சின்னங்களை அவமதித்ததாகக் கூறி இரண்டுபேர் பொதுமக்களால் அடித்தே கொல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த லூதியானா நீதிமன்றம்
குண்டு வெடிப்பு நிகழ்ந்த லூதியானா நீதிமன்றம்

இந்த நிலையில், தற்போது லூதியானாவிலிருக்கும் கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. நீதிமன்றத்திலுள்ள ஒரு கழிவறையில் இந்த குண்டு வெடித்திருக்கிறது. இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், பலத்த காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சம்பவத்தால், நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஊழியர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி நீதிமன்ற வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓர் அரசு வளாகத்தில், அதுவும் நீதிமன்றத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லூதியானா நீதிமன்ற வளாகம்
லூதியானா நீதிமன்ற வளாகம்

ஏற்கெனவே, கடந்த கடந்த 9-ம் தேதி டெல்லியிலுள்ள ரோஹினி மாவட்ட நீதிமன்றத்தில் வீரியம் குறைந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) பணிபுயுரியும் விஞ்ஞானி பாரத் பூஷண் கடாரியா கைதுசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.