Published:Updated:

`உ.பி-யில் கிடைத்துள்ள 3,000 டன் தங்கம்!’ - 5 மடங்காக உயரும் இந்திய இருப்பு?

தங்க சுரங்கம்
தங்க சுரங்கம்

கணிக்கப்படும் தங்கத்தின் அளவுகள் உறுதியாகும் பட்சத்தில், உலகில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள சோன்பத்ரா எனும் மாவட்டத்தில், ஹார்தி மற்றும் சோனா பகதி ஆகிய பகுதிகளில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன என்பதை இந்திய புவியியல் ஆராய்ச்சித்துறை, உத்தரப்பிரதேச மாநிலத்தின் புவியியல் ஆராய்ச்சிதுறை மற்றும் சுரங்கத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரி கே.கே.ராஜ்
சுங்கத்துறை அதிகாரி கே.கே.ராஜ்
ANI

இதுதொடர்பாக, அந்த மாநிலத்தின் சுரங்கத்துறை இயக்குநர் ரோஷன் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சோன்பத்ராவில் அதிக தங்கம் இருக்கும் இரண்டு பெரிய தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோனா பகதி பகுதியில் சுமார் 2,943 டன் தங்கமும் ஹார்தி பகுதியில் சுமார் 646 கிலோ தங்கமும் இருக்கலாம்” என்று கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், சோன்பத்ரா மாவட்டத்தின் சுங்கத்துறை அதிகாரி கே.கே.ராஜ், ``ஆய்வுகள் முழுவதுமாக முடிந்தபிறகு அறிக்கையை சமர்பிக்க உள்ளோம். பின்னர், அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

உருக்கப்பட்ட தங்கம்...
களவு போன பொக்லைன்கள்...
சிக்கிய பலே கொள்ளையன்! #TamilnaduCrimeDiary

கணிக்கப்படும் தங்கத்தின் அளவுகள் உறுதியாகும் பட்சத்தில், உலகில் அதிக தங்கத்தை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் இருக்கும் தங்கத்தின் மதிப்பைவிட 5 மடங்கு அதிகமாக இருக்கும். உலக தங்க கூட்டமைப்புகளின் தரவுகளின்படி, அமெரிக்கா 8,133.5 டன் தங்கத்துடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள், தற்போது அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சுரங்கம் இருக்கும் பகுதி
சுரங்கம் இருக்கும் பகுதி
ANI

தங்கத்தைத் தவிர ஆண்டலூசைட், அலுமினியம் நெசோலிகேட், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற பிற தாதுக்களும் டன் கணக்கில் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பதை புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நான்கு மாநிலங்களின் எல்லைகளைக் கொண்டுள்ள சோன்பத்ரா மாவட்டம், பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதியாக அறியப்படுகிறது.

`பூமிக்கடியில் 12 கிலோ தங்கம்; விதிமீறிய அதிகாரிகள்?’- திருவாரூர் முருகன் விவகாரத்தில் புதிய சர்ச்சை
அடுத்த கட்டுரைக்கு