Published:Updated:

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு; உறுதிசெய்த அரசு! - தீவிர கண்காணிப்பில் பெற்றோர்

கொரோனா
கொரோனா

சீனாவை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தாக்குதல், அடுத்தடுத்து பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இத்தாலி, இரான் உள்ளிட்ட நாடுகளில் தீவிர பாதிப்பை ஏற்படுத்திவரும் வைரஸ் தாக்குதல் இந்தியாவையும் அச்சுறுத்துகிறது. 

சீனாவில் பெரும் அழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்குதல், அந்நாட்டு அரசு மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, அங்கு அதன் வேகம் குறைந்துள்ளது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. 

கொரோனா
கொரோனா

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் மூலம் இந்த வைரஸ் இந்திய நகரங்களிலும் கடந்த வாரம் பரவத் தொடங்கியது. ஏற்கெனவே, இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில், நேற்று மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொலைகார வைரஸ் ‘கோவிட்-19’ - “பயம் தேவையில்லை”

இத்தாலியிலிருந்து திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அவர்களின் உறவினர்கள் இருவரும், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவர்களோடு நெருக்கமாகப் பழகியவர்கள், தங்கியிருந்தவர்கள் எனப் பலர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா முன்னெச்சரிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை

இந்த நிலையில், இத்தாலி நாட்டிலிருந்து கடந்த 7-ம் தேதி பெற்றோருடன் கொச்சி விமான நிலையம்  வந்துசேர்ந்த 5 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை, கொச்சியில் உள்ள கலமசேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனா பாதிப்புக்குள்ளான குழந்தையின் பெற்றோருக்கு பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அதனால் அந்த மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. 

representational image
representational image

கேரளாவில், ஏற்கெனவே கோழிப்பண்ணைகள் மூலம் பறவைக் காய்ச்சல் பரவிவருகிறது. அதனால் பல இடங்களில் கோழிகளை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்ட அரசு மருத்துவமனையில் குரங்குக் காய்ச்சல் அறிகுறியுடன் 6-ம் தேதி அனுமதிக்கப்பட்ட மீனாட்சி என்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்தடுத்த இயற்கைச் சீற்றங்கள் மற்றும் கொடிய நோய்கள் காரணமாக கேரள மக்கள் கவலையடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு