Published:Updated:

`போலீஸ் அங்கிள்.. வைரஸைப் பிடிச்சு துப்பாக்கியால சுட்டுருங்க!’ -3 வயது சிறுவனின் சேட்டையும் சேவையும்

``கபீரின் குறிக்கோள் ரூ.10,000 அளிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அந்தத் தொழிலதிபர் 10,000 ரூபாய்க்குப் பதிலாக 50,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார்.”

உலகளவில் கொரோனா வைரஸானது அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் அதிகம் பாதிப்படைந்த நாடுகள் பலவும் தற்போது மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. ஆனால், அலட்சியமாக இருந்த பல நாடுகளும் கடுமையாகத் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றன. இந்தியா ஆரம்பம் முதலே ஊரடங்கை அமல்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை தங்களால் முடிந்த நிதிகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதி காவல்துறை அறைக்கட்டளைக்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த கபீர் என்ற மூன்று வயது சிறுவன் ஒருவன் 50,000 ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தப் பணத்தை திரட்ட கபீர் எடுத்த முயற்சி இன்னும் ஆச்சர்யத்தை அளிக்கும். கபீர் கப் கேக்குகளை தன் தாயின் உதவியுடன் தயாரித்து தொழில் முனைவர் ஒருவருக்கு 10,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். கபீரின் குறிக்கோள் ரூ.10,000 அளிக்க வேண்டும் என்பதுதான். ஆனால், அந்தத் தொழிலதிபர் 10,000 ரூபாய்க்குப் பதிலாக 50,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார். இதை அப்படியே மும்பை காவல்துறை கண்காணிப்பாளர் பரம் பீர் சிங்கிடம், கபீர் அளித்துள்ளார். இதனால், காவல்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

`போலீஸ் அங்கிள்... எங்க அக்காவை அரெஸ்ட் பண்ணுங்க..!’- 8 வயதுச் சிறுவன் புகாரும் கலகலப்பு பின்னணியும்

கபீரின் நெகிழ வைக்கும் இந்தச் சேவையைப் பாராட்டி மும்பை காவலர்கள் வீடியோ ஒன்றை தயாரித்து தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் சிறுவன் கேக் தயாரிப்பது தொடர்பான வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவின் கேப்ஷனில், ``இந்த மூன்று வயது சிறுவன் மும்பை காவலர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் அளித்துள்ளார். அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். இது விலைமதிப்பற்ற பங்களிப்பு. எங்கள் அற்புதமான சிறிய கொரோனா வைரஸ் தடுப்பு வீரரின் இதயத்தைவிட பெரிய இதயத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா?” என்று பதிவிட்டுள்ளனர்.

சிறுவன் கபீர்
சிறுவன் கபீர்

காசோலையுடன் கபீர் காவலர்களுக்கு சிறிய கடிதக் குறிப்பு ஒன்றையும் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், ``டியர் போலீஸ் அங்கிள், எங்களைக் கவனமாகப் பார்த்துக் கொள்வதற்கு நன்றி. தயவு செய்து அந்த வைரஸைப் பிடித்து உங்களுடைய துப்பாக்கியால் சுட்டு விடுங்கள். அப்போதுதான் நான் எனது நண்பர்களைப் பார்க்க முடியும். நீங்கள் இந்தப் பணத்தை மருந்துகள் மற்றும் லாலி பாப் போன்றவற்றை வாங்க பயன்படுத்துங்கள். அன்புடன் கபீர்” என்று எழுதியுள்ளார். கூடவே, ஸ்வீட் பாக்ஸ் ஒன்றையும் அவர்களுக்கு அளித்துள்ளார். கபீர் தொடர்பாக மும்பை காவலர்கள் வெளியிட்ட வீடியோ நெட்டிசன்கள் பலரையும் கவர்ந்துள்ளது. சிறுவனுக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மும்பை காவல்துறை
மும்பை காவல்துறை

சமூக ஊடகங்களை சரியான விஷயங்களுக்கு மும்பை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். நெகிழ வைக்கும் வீடியோக்கள், விழிப்புணர்வு தொடர்பான மீம்ஸ்கள் என பலவற்றையும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் மும்பை காவலர்கள் பதிவிடுவது வழக்கம். இதனால், நெட்டிசன்கள் அதிகம் விரும்பும் ஒரு பக்கமாகவும் மும்பை காவல்துறை பக்கம் விளங்குகிறது. இந்த வீடியோவுக்காக அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

’9 மாத கர்ப்பிணி; நடுவழியில் பிறந்த குழந்தை.. 160 கி.மீ பயணம்’ -புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேதனை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு