Published:Updated:

30 பேருக்கு கொரோனா எப்படி வந்தது..?! -டிரேஸ் செய்ய முடியாமல் விழிபிதுங்கும் அதிகாரிகள்

விஜயவாடா
விஜயவாடா

இதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 69 பேரில் 59 பேர், மாவட்டத்தின் முக்கிய நகரமான விஜயவாடா எல்லைக்குள் இருக்கின்றனர்.

கொரோனா தொற்று ஏற்பட்ட மாநிலங்களில் ஆந்திரா மாநிலமும் முக்கியமானது. ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களின் எல்லையாக இருப்பதால், இந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மத்திய அரசு, மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், ஆந்திரா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அம்மாநிலத்தைப் பொறுத்தவரை, இதுவரை வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடமிருந்தே தொற்று பரவி வந்தது.

30 பேருக்கு கொரோனா எப்படி வந்தது..?! -டிரேஸ் செய்ய முடியாமல் விழிபிதுங்கும் அதிகாரிகள்

இந்நிலையில், அம்மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்த மாவட்டத்தில், இதுவரை 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 69 பேரில் 59 பேர், மாவட்டத்தின் முக்கிய நகரமான விஜயவாடா எல்லைக்குள் இருக்கின்றனர். இவர்களில் 30 பேருக்கு தொற்று எப்படி வந்தது என்பதே தெரியவில்லை. இதுதொடர்பாகப் பேசியுள்ள அம்மாவட்ட கலெக்டர் எம்.டி இம்தியாஸ் மற்றும் போலீஸ் கமிஷனர் திருமலை ராவ், ``பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எப்படி வந்தது என்பது தொடர்பான தகவல்களைச் சேகரித்தோம். அப்போது, பாதிக்கப்பட்டவர்களில் 35 பேருக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், டெல்லி சென்று வந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதேநேரம், 30 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களிடம் பேசியதில், லாக் டௌன் காலத்தில் வீட்டில் இருந்து எங்கும் செல்லவில்லை என்றே கூறுகின்றனர். சிலரோ, காய்கறி வாங்கச் சென்றதைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை என்றே கூறுகின்றனர். ஒருவர், மெடிக்கல்களுக்கு மருந்து சப்ளை செய்கின்றவர். அவர், மெடிக்கலை தவிர வேறு எங்கும் செல்லவில்லை. அவருக்கும் தொற்று இருக்கிறது. இப்படி பல நபர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான மூலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

30 பேருக்கு கொரோனா எப்படி வந்தது..?! -டிரேஸ் செய்ய முடியாமல் விழிபிதுங்கும் அதிகாரிகள்

சமூக விலகலைப் பின்பற்றாமல் இருந்ததே இவர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான காரணமாகப் பார்க்கிறோம். நகரின் பிரதான சாலைகளில் யாரும் வெளியே வரவில்லை. ஆனால், உள் பகுதிகளில், மக்கள் மற்றவர்களைச் சந்திப்பது, மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வது என ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருந்தார்களா என சந்தேகப்படுகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு