Published:Updated:

இந்தியா: தடுப்புக் காவலில் 30% பேர் இஸ்லாமியர்கள்- `Prison Statistics of India’ தரவுகள் சொல்வதென்ன?!

சிறைச்சாலை ( representational image )

`தடுப்புக் காவல் கைதிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது’ என்கின்றன Prison Statistics of India தரவுகள்.

இந்தியா: தடுப்புக் காவலில் 30% பேர் இஸ்லாமியர்கள்- `Prison Statistics of India’ தரவுகள் சொல்வதென்ன?!

`தடுப்புக் காவல் கைதிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது’ என்கின்றன Prison Statistics of India தரவுகள்.

Published:Updated:
சிறைச்சாலை ( representational image )

இந்தியாவிலுள்ள சிறைகளில் குற்றவாளிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் மற்றும் இதில் சேராத பிற கைதிகள் என நான்கு வகையான கைதிகள் உள்ளனர். தடுப்புக் காவல் கைதிகள் என்பவர்கள் விசாரணையின்றி சட்டரீதியாகக் காவலில் கைதாகியிருப்பவர்கள் என்பதைக் குறிக்கும். இந்தச் சூழலில், 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2021-ம் ஆண்டு இந்தியச் சிறைகளிலுள்ள இஸ்லாமியக் கைதிகள் குறித்து, கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதன்படி தடுப்புக் காவல், 2019-ம் ஆண்டு 38%-ஆக இருந்த இஸ்லாமிய தடுப்பு காவல் கைதிகளின் எண்ணிக்கை 2020-ல் 32%-ஆகவும், 2021-ல் 30%-ஆகவும் உள்ளது. விசாரணைக் கைதிகளைப் பொறுத்தவரையில் 2019-ல் 20%-ஆக இருந்தது 2020-ல் 21%-ஆக உயர்ந்தது. 2021-ல் இது 20%-க்கும் கீழ் குறைந்துள்ளது. 

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

இதேபோல், 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 2021-ம் ஆண்டில் இந்தியச் சிறைகளில் உள்ள இந்து கைதிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில், 2019 மற்றும் 2020-ல் 70% க்கும் மேல் இருந்த விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2021-ல் 75% நெருங்கியது. தடுப்புக்காவலில் உள்ள கைதிகளைப் பொறுத்தவரை 2019, 2020-ல் 60%-க்கும் கீழ் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 2021-ல் 60%-ஐ தாண்டியுள்ளது. 

source: Flourish team
source: Flourish team

தடுப்புக் காவல் கைதிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டு அளவில் ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத், தமிழ்நாடு, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலேயே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, அஸ்ஸாம் சிறைகளிலுள்ள கைதிகளில் 41 சதவிகித விசாரணைக் கைதிகள் முஸ்லிம்கள். அந்த மாநிலத்தின் மக்கள்தொகையில் முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம்தான். மொத்த மக்கள்தொகையின் எண்ணிக்கையைவிட, சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது குஜராத், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஜம்மு - காஷ்மீரில் அதிகமாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Source: Prison Statistics of India