அமெரிக்காவில் ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தீ: 313 பயணிகள் தப்பினர்!

நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்சியிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீ பிடித்ததால்,விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. 313 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

313 பயணிகளுடன் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இருந்து போயிங் 777 வகையை சேர்ந்த ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்தில் விமானத்தில் இடது பக்கத்தில் தீ பிழம்புகள் வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானம் மீண்டும் நியூஜெர்சி  விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கியது. விமானம் இறங்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டது. எனினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பயணிகளை இந்தியா கொண்டு செல்ல மாற்று விமானம் தயாராகி வருகிறது. விமானத்தில் பறவை மோதியதால் தீ பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!