இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் தல்பிர் சிங்! | General Dalbir Singh Suhag Takes Over As New Army Chief

வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (31/07/2014)

கடைசி தொடர்பு:13:26 (31/07/2014)

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் தல்பிர் சிங்!

புதுடெல்லி: இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக தல்பிர் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை இந்திய ராணுவ தளபதியாக இருந்த பிக்ரம் சிங்கின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, புதிய ராணுவ தளபதியாக தல்பிர் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அடுத்த 30 மாதங்களுக்கு இந்தப் பொறுப்பில் நீடிப்பார்.

1974 ஆம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் தல்பிர் சிங் சுஹாக், பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். 1987 ஆம் ஆண்டு இலங்கையில் இந்திய ராணுவம் அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட போது, தல்பிர் சிங் சுஹாக் கமாண்டராக பணியாற்றியுள்ளார். லெஃப்டினன்ட் ஜெனரலாக பதவி வகித்து வந்த தல்பிர் சிங்கை ராணுவத் தளபதியாக நியமிக்க, காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவை கடந்த மே மாதம் முடிவு செய்தது.

இதற்கு அப்போது பா.ஜனதா கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராணுவத் தளபதி நியமன விவகாரத்தில், ஐக்கிய முற்போக்கு அரசின் முடிவில் மாற்றம் செய்ய விரும்பவில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்