செப். 27ல் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி! | Sep. 27 of the UN in addressing the Prime Minister Modi!

வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (02/08/2014)

கடைசி தொடர்பு:12:28 (02/08/2014)

செப். 27ல் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

ஆண்டு தோறும் நடைபெறும் ஐநா பொதுச் சபை கூட்டத்தில் சர்வதேச தலைவர்கள் உரை நிகழ்த்து வழக்கம்.
 
ஐ.நா. பொதுச் சபையின் 69வது கூட்டம் வரும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் தலைவர்களின் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இதன்படி 200 சர்வதேச தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் முன்னிலையில் பிரதமர் உரையாற்றுகிறார். சர்வதேச அளவிலான பிரச்னைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்