தமிழகத்தை சேர்ந்த பானுமதி உள்பட 4 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு! | Sworn in as a Justice of the Supreme Court of the State of 4 people including Bhanumathi!

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (13/08/2014)

கடைசி தொடர்பு:14:20 (13/08/2014)

தமிழகத்தை சேர்ந்த பானுமதி உள்பட 4 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு!

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த பானுமதி உள்பட நான்கு பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பானுமதி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். இந்நிலையில், நீதிபதிகள் பானுமதி, யு.யு.லலீத், ஏ.எம்.சப்ரே, பி.சி.பண்ட் ஆகிய 4 பேர்களை  உச்ச நீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து பானுமதி உள்ளிட்ட 4 பேரும் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்