வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (13/08/2014)

கடைசி தொடர்பு:17:20 (13/08/2014)

பெட்ரோல் விலை ரூ.1. 89 முதல் 2.38 வரை குறைகிறது!

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதன் எதிரொலியாக பெட்ரோல் விலை குறைக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அநேகமாக லிட்டருக்கு 1 ரூபாய் 89 காசுகள் முதல் 2 ரூபாய் 38 காசுகள் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், இந்த விலை குறைப்பு நாளை அல்லது நாளை மறுதினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று பேரல் ஒன்றுக்கு ரூ.104 அமெரிக்க டாலராக குறைந்தது. இது கடந்த 9 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி என்று கூறப்பட்ட நிலையில், இந்த விலை வீழ்ச்சி காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை குறைக்கலாம் என நேற்றே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்