உறுப்புகள் பரிமாற்ற திருத்த மசோதா நிறைவேற்றம்! | மனித உடல் உறுப்புகள் பரிமாற்ற திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (12/08/2011)

கடைசி தொடர்பு:19:14 (12/08/2011)

உறுப்புகள் பரிமாற்ற திருத்த மசோதா நிறைவேற்றம்!

புதுடெல்லி, ஆக.12,2011

மனித உடல் உறுப்புகள் பரிமாற்ற திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2009-ம் ஆண்டு மனித உடல் உறுப்புகள் பரிமாற்ற மசோதா நாடாமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மனித உடல் உறுப்புகளை திருடுவோருக்கு தண்டனையை அதிகரிக்கும் வகையில், அந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டது. இந்தத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இம்மசோதா இன்று குரல் ஓட்டெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, இந்தத் திருத்த மசோதா சட்டமாக மாறும்.

இந்த மசோதாவின்படி, சட்டவிரோதமாக, மனித உடல் உறுப்புகளை திருடுவோருக்கு 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடிவரை அபராதமும் விதிக்கப்படும்.

அத்துடன், சட்டரீதியாக உடல் உறுப்பு தானம் செய்யவும், பெறவும் அனுமதிக்கப்பட்ட நெருங்கிய உறவினர்கள் பட்டியலில், தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி ஆகியோரையும் சேர்க்க இம்மசோதா வகை செய்கிறது.

மனித உடல் உறுப்புகளை மட்டுமின்றி, மனித உடல் திசுக்களை திருடுவதும் குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்