குஜராத் கலவரத்திற்கு மோடியை குற்றம் சாட்டக்கூடாது: ஆஸி. பிரதமர் அபோட்

புதுடெல்லி: குஜராத் கலவரத்துக்கு நரேந்திர மோடியை குற்றம் சொல்லக் கூடாது என்று இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.  இந்நிலையில் 'ஹெட்லைன்ஸ் டுடே'  ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவரிடம் மோடி முதல்வராக இருந்தபோது,   2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், " 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடியை குற்றம் சொல்லக் கூடாது. ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை அவர் மாநிலத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பொறுப்பில் இருந்த ஒரு தலைமை அதிகாரி; அவ்வளவுதான்.

இந்த கலவரம் தொடர்பாக மோடி மீது முடிவற்ற ஏராளமான விசாரணைகள் நடத்தப்பட்டு உள்ளது. அவை அனைத்திலும் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். எனவே, என்னைப் பொறுத்தவரை இவைகளே போதுமானவை. சில நேரங்களில் எங்களைப் போன்றவர்கள் தலைமை பதவிக்கும் நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதனால் நாட்டில் பயங்கரமான நிகழ்வுகள் நடக்கும்போது தலைமை பதவி வகிப்பவரை குற்றம் சாட்டக் கூடாது" என்று கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!