வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (25/09/2014)

கடைசி தொடர்பு:17:22 (25/09/2014)

மேற்கு தொடர்ச்சி மலையில் புதிய பணிகள் மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் தடை!

புதுடெல்லி: மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் புதிய பணிகள் எதையும் செய்யக்கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கஸ்தூரி ரங்கன் அறிக்கை தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று (25ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, ''மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் புதிய பணிகள் எதையும் செய்யக்கூடாது'' என உத்தரவிட்டார்.

மேலும், கட்டுமானம், சுரங்கம் உள்ளிட்ட பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தரக்கூடாது எனவும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அதிகரிப்பது, குறைப்பது பற்றி மத்திய அரசு முடிவு எடுக்கலாம் எனவும், மாநிலங்களுடன் ஆலோசித்து யாருக்கும் பாதிப்பின்றி முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

கஸ்தூரி ரங்கன் அறிக்கையின்படி தமிழகத்தில் 135 கிராமங்களிலும், கேரளாவில் 123 கிராமங்களிலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள என நாட்டில் மொத்தம் 4,156 கிராமங்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்