வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (20/10/2014)

கடைசி தொடர்பு:17:03 (20/10/2014)

ஆந்திரா பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 10 பேர் பலி!

காக்கிநாடா: ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திரா மாநிலம், காக்கிநாடாவில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் இன்று (20ஆம் தேதி) வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பிடித்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு முழுவதும் பரவியது.

இந்த விபத்தில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், தீ தொழிற்சாலை முழுவதும் பரவி வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்