வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (29/10/2014)

கடைசி தொடர்பு:08:40 (29/10/2014)

நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை: ஜிதேந்திர சிங் தகவல்!

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்தியா முழுவதிலும் இன்று சர்க்கரை நோய் பரவலாக காணப்படுகிறது. இதில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் 6 கோடியே 70 லட்சம் நீரிழிவு நோயாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் 9 கோடியே 20 லட்சம் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் வருகின்ற 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 100 கோடியாக அதிகரித்துவிடும்.

இந்நிலையில், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை அளவிடும் இலவச மருத்துவ பரிசோதனை நடத்தும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. நீண்டகாலமாகவே இது தொடர்பான விவாதம் அமைச்சர்கள் அளவிலேயே இருந்து வருகிறது. இந்த திட்டம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான இந்த திட்டத்தின் மூலம் இந்த நோயால் ஏற்படக் கூடிய சிறுநீரக செயல் இழப்பு, கண் பார்வை இழத்தல் போன்றவற்றை சுலபமாக சமாளிக்க கூடிய சூழல் உருவாகும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்