வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி கணவனை ஓரினச்சேர்க்கையாளர் என நிரூபித்த பெண்!

பெங்களுரு: தாம்பத்ய உறவுக்கு மறுத்த கணவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என நிரூபிக்க, மனைவியே வீட்டில் ரகசிய வீடியோ எடுத்து கணவனை கைது செய்ய வைத்த சம்பவம் பெங்களுருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விவேக் (32). இவரது மனைவி காயத்ரி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). விவேக் பெங்களூருவில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி காயத்ரி. பல் மருத்துவர்.

கடந்த 8 மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு தம்பதிகள் மல்லேஸ்வரம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தனர்.

திருமணம் ஆன நாளில் இருந்து  விவேக், காயத்ரியுடன் தாம்பத்ய உறவை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இரவு நேரங்களில் தனி அறையில் படுக்கும் விவேக், ஒரு பெண்ணைப் போன்று தன்னை அலங்காரப் படுத்திக்கொள்வாராம். திருமணமாகியும் வழக்கமான தம்பதிகள் போல இன்பமாக இருக்க முடியவில்லையே என காயத்ரி மனம் புழுங்கினார்.

பிரச்னை என்னவென்று அறிய விவேக்கை மனநல மருத்துவரிடம் அழைக்க, இதற்கு விவேக் மறுத்து விட்டார். மேலும் தான் வீட்டில் இல்லாத சமயங்களில் பல ஆண்கள், அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வதாக அக்கம்பக்கத்தவர்கள் மூலம் காயத்ரிக்கு தெரியவந்தது.

இதனால் கணவர் மீது சந்தேகம் அடைந்த காயத்ரி, ஒரு திட்டத்தை செயல்படுத்த எண்ணினார். அதன்படி தன்னுடைய வீட்டின் ஒவ்வொரு அறையிலும் கணவருக்கு தெரியாமல் மறைவிடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தினார். பின்னர் தன் தாய் தந்தையரை பார்ப்பதாக கூறி சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

திட்டப்படி தும்கூரில் இருந்து ஒரு வாரம் கழித்து பெங்களூருக்கு திரும்பிய காயத்ரி, கண்காணிப்பு ரகசிய கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அதில் அவரது கணவர் விவேக் பல ஆண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் காட்சிகள் ஓடின. ஓரினச்சேர்க்கையாளரான விவேக் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததை காயத்ரியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கேமராவில் பதிவான காட்சிகளை சி.டி.யில் பதிவு செய்து, ஓரினச்சேர்க்கையாளரான அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், இதற்கு அவரது பெற்றோரும் உடந்தை என்றும்  காவல்துறையில் புகார் செய்தார். சி.டி.யையும் காவல்துறையினரிடம் காயத்ரி சமர்ப்பித்தார். ஆதாரங்களை பார்த்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விவேக்கை கைது செய்தனர்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!