சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி! | NCP chief Sharad Pawar was on Wednesday injured when he slipped during morning walk

வெளியிடப்பட்ட நேரம்: 12:34 (03/12/2014)

கடைசி தொடர்பு:12:43 (03/12/2014)

சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி:  நடைபயிற்சியின்போது தவறிவிழுந்து காயமடைந்த சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் , தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் ( 73) டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போது திடீரென தவறி விழுந்தார்.

இதனால் காலிலும், முதுகிலும்  அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் மும்பை கொண்டு செல்லப்பட்டார்.

அங்குள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.பவாருடன்  அவரின்  மனைவி பிரதிபாவும், மகள் சுப்ரியா சுலேவும் உடன் சென்றுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்