இந்தியாவில் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை: சொல்கிறார் பாஜக எம்.பி.! | AD in India 2nd century sages nuclear test was held in the Parliament that the BJP MP Ramesh pohkri nishank said.

வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (04/12/2014)

கடைசி தொடர்பு:16:58 (04/12/2014)

இந்தியாவில் கி.பி.2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை: சொல்கிறார் பாஜக எம்.பி.!

புதுடெல்லி: இந்தியாவில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை முனிவர்களால் நடத்தப்பட்டது என்று பாஜக எம்.பி. ரமேஷ் போஹ்ரியால் நிசாங்க் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தில்  பேசிய  பாஜக எம்.பி. ரமேஷ் போஹ்ரியால் நிசாங்க், "பாரத நாட்டில் இருந்தே அறிவியல் சிந்தனைகள் உலகின் பிற தேசங்களுக்குப் பரவின.

இன்றைய அறிவியல் கணக்கீடுகளை  ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே  ஜோதிடம் என்று முன்னோர்கள் கணித்துள்ளனர். விநாயகக் கடவுளின் முகம் அந்தக் கால அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கு எடுத்துக் காட்டு. அதுவே இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி  எனப்படுகிறது"என்றார்.

மேலும் அவர், பாரத நாட்டு முனிவர்கள் கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலேயே அணு ஆயுத சோதனை நடத்தி உள்ளனர் என்றும் கூறினார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை