Published:Updated:

36 மணிநேர சிகிச்சை, 115 தையல்கள்... தெருநாய் தாக்குதலில் சிக்கிக்கொண்ட சிறுமிக்குத் தீவிர சிகிச்சை!

நாய் (சித்திரிப்புப் படம்) ( ABC News )

உத்தரப்பிரதேசத்தில், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, தெருநாய் கொடூரமாக கடித்துக் குதறியதில் சிறுமிக்கு 115 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.

36 மணிநேர சிகிச்சை, 115 தையல்கள்... தெருநாய் தாக்குதலில் சிக்கிக்கொண்ட சிறுமிக்குத் தீவிர சிகிச்சை!

உத்தரப்பிரதேசத்தில், வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, தெருநாய் கொடூரமாக கடித்துக் குதறியதில் சிறுமிக்கு 115 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
நாய் (சித்திரிப்புப் படம்) ( ABC News )

கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் தெருநாய்களின் தொல்லை மக்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுமளவுக்கு தெருநாய்களின் தொல்லை அதிகரித்திருக்கிறது. கடந்த இரன்டு மாதங்களுக்கு முன்புகூட கேரளாவில், கடைக்குப் பால் வங்கச் சென்ற சிறுமி, தெருநாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்திலும் இதேபோன்ற கொடூரமான சம்பவம் நடந்திருக்கிறது.

தெருநாய்கள் (சித்திரிப்புப் படம்)
தெருநாய்கள் (சித்திரிப்புப் படம்)
Photo by Daniel Pell on Unsplash

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விஜய்நகர் பகுதியில் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, தெருநாய் ஒன்று கொடூரமாக கடித்துக் குதறியிருக்கிறது. மேலும் இதில் சிறுமியின் முகத்திலிருந்த சதையை அந்த நாய் பிய்த்துவிட்டது. அதையடுத்து உடனடியாக சிறுமியின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்குச் சிறுமியை அழைத்துச்சென்றிருக்கின்றனர். ஆனால், அங்கு ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூற, சிறுமி காஜியாபாத்தின் எம்.எம்.ஜி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை
மாதிரிப் புகைப்படம்

பின்னர் அங்கு நடந்த 36 மணிநேர சிகிச்சையில் சிறுமிக்கு 115 தையல்கள் போடப்பட்டன. இது குறித்துப் பேசிய மருத்துவர் மனோஜ் சதுர்வேதி, ``இதுபோன்ற அறுவை சிகிச்சையின்போது சீரம் மற்றும் ஆன்ட்டி ரேபிஸ் (Anti rabies) போன்ற ஊசிகள் கொடுக்கப்பட வேண்டும். விலையுயர்ந்த இந்த ஊசி மருந்துகள், அரசு வழங்காததால், வெளியிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.

மேலும், இன்னும் 14-15 நாள்களில் குழந்தை இயல்புநிலைக்குத் திரும்பும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.