வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (16/12/2014)

கடைசி தொடர்பு:17:00 (16/12/2014)

ஜெர்மன் மொழியை விருப்ப பாடமாக படிக்கலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியை விருப்பப் பாடமாக நடப்பு ஆண்டே மாணவர்கள் படிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியாக இருந்த ஜெர்மனை நீக்கி சமஸ்கிருதத்தை சேர்த்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10ஆம் வகுப்பு தேர்வுக்கு முன் 8ஆம் வகுப்பு வரை 3 மொழியில் தேர்ச்சி பெறுவது அவசிமாக இருந்தது. நடப்பு ஆண்டில் 3ஆம் மொழிக்கான தேர்வு எதுவும் நடைபெறாது.

ஜெர்மனையோ வேறு இந்திய மொழிகளையோ மாணவர்கள் விருப்ப பாடமாக தேர்வு செய்யலாம். சமஸ்கிருதத்திலோ, வேறு இந்திய மொழியிலோ அடுத்த ஆண்டு முதல் தேர்வு எழுத வேண்டும். 3ஆம் மொழித் தேர்வு எழுதாதபோதும் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், 3ஆம் மொழி பிரச்னையில் மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்தை இன்று ஏற்றுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழியை விருப்பப் பாடமாக நடப்பு ஆண்டே மாணவர்கள் படிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்