Published:Updated:

`தரமான குடிநீர் தயாரிப்பில் 37.5 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!' - அமைச்சர் ஸ்மிருதி இரானி

இந்தியாவில், சுமார் 256 மாவட்டங்களில் சுகாதாரமான குடிநீருக்குத் தேவை இருப்பதை நீர்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. முதலில், இந்த மாவட்டங்களிலுள்ள கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண்கள் மேம்பாடு - ஸ்மிருதி இரானி
பெண்கள் மேம்பாடு - ஸ்மிருதி இரானி

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின்மூலம், இந்தியப் பெண்களுக்கு மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ``தண்ணீரின் தரத்தை உறுதிப்படுத்தி, சுகாதாரமான குடிநீராக மாற்றி, அதை விற்பனை செய்வதன்மூலம் 37.5 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி
ஸ்மிருதி இரானி

இதன்படி, இந்தியா முழுமைக்கும் மொத்தம் 7,50,000 கிராமங்கள் தேர்வுசெய்யப்பட்டு, அவற்றிலிருந்து தலா 5 பெண்களுக்கு குடிநீரின் தரத்தை மேம்படுத்துவது குறித்து பயிற்சியளிக்கப்படும். தற்போது, இந்தியாவில் சுமார் 256 மாவட்டங்களில் சுகாதாரமான குடிநீர் தேவை என்பதை நீர்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. முதலில், இந்த மாவட்டங்களிலுள்ள கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Vikatan

இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையில் மொத்தம் 27% மட்டுமே பெண் தொழிலாளர்கள். இந்த சதவிகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பணிக்குச் செல்லும் பெண்களை ஊக்கப்படுத்துவதற்காக, சம்பளத்துடன்கூடிய குழந்தைப்பேறு விடுப்பை 26 வாரங்களுக்கு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளோம்.

குடிநீர்
குடிநீர்

``ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த துறைகளிலும்கூட, தற்போது பெண் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பொறுப்பில், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 2014 வரை மொத்தமே 50,000 பெண்கள் இருந்துள்ளனர். ஆனால், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை 75,000 பேராக உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 1.5 லட்சமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது'' என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.