வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (11/09/2011)

கடைசி தொடர்பு:14:22 (11/09/2011)

காலநிலை மாற்றத்தை ஆராய செயற்கைகோள்: இஸ்ரோ

பெங்களூர், செப்.11,2011

காலநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிக்காக உருவாக்‍கப்பட்டுள்ள அதிநவீன செயற்கைக்‍கோள், அடுத்த மாதம் 12-ம் தேதி விண்ணில் ஏவப்படுமென இஸ்ரோ அறிவித்துள்ளது.

பெங்களுரில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர்  ராதாகிருஷ்ணன், அக்‍டோபர் மாதம் 12-ம் தேதியன்று காலை 11 மணிக்‍கு, செயற்கைக்‍ கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.

பெங்களூரில் தற்போது அதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், இச்சோதனைகள் முடிந்ததும் பெங்களுரில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வரும் 14ம் தேதி செயற்கைக்‍கோள் எடுத்து செல்லப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் விண்வெளியில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்த ஆராய்ச்சிக்காக, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக இணைந்து, 'மேகா டிராபிக்யூ' இந்த அதிநவீன செயற்கைக்‍கோளை உருவாக்‍கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்