நொய்டா கொலை: சுரேந்தர் கோலியின் தூக்குத் தண்டனை ஆயுளாக குறைப்பு! | Surinder koliys death sentences, reduction life imprisonment!

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (28/01/2015)

கடைசி தொடர்பு:18:55 (28/01/2015)

நொய்டா கொலை: சுரேந்தர் கோலியின் தூக்குத் தண்டனை ஆயுளாக குறைப்பு!

புதுடெல்லி: நொய்டாவில் பல்வேறு இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்த குற்றவாளி சுரேந்தர் கோலிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

டெல்லியை அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் பல்வேறு இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அடிக்கடி காணாமல் போனவண்ணம் இருந்தனர். இதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், காணாமல் போன போயல் என்ற பெண்ணின் தந்தை உத்தரபிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு சி.பி.. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களாக இயங்காமல் இருந்த செல்போன் நம்பர் திடீரென இயங்கியது. அதையடுத்து, அந்த செல்போன் எண்ணை பயன்படுத்திய சுரேந்தர் கோலி என்பவரிடம் சி.பி.. விசாரணை நடத்தியது. அதில், பாயலை கொன்று தனது பங்களாவில் புதைத்து விட்டதாக கோலி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது, அங்கு ஏராளமான மண்டை ஓடுகள் கிடைத்தன. அதேபோல், அந்த பங்களா காம்பவுண்ட் சுவருக்குப் பின்னால் இருந்த காலி நிலத்திலுள்ள சாக்கடை கால்வாயில் கொலை செய்யப்பட்டவர்களின் துணிகள், செருப்பு மற்றும் குழந்தைகளின் ஸ்கூல் பேக் போன்றவையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இதற்கு உடந்தையாக இருந்ததாக சுரேந்தர் கோலியின் முதலாளி மொனிந்தர் சிங்கையும் சி.பி.. போலீசார் கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கில் மொனிந்தர் சிங்குக்கு தொடர்பு இல்லை என அவர் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, மொனிந்தர் சிங்குக்கு தெரியாமல், ஏராளமான இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை கொலை செய்ததாக சுரேந்தர் கோலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காசியாபாத் சி.பி.. நீதிமன்றம் கோலிவுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சுரேந்தர் கோலி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, கோலியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்