கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் அதிர்ச்சி!

புதுடெல்லி: பா.ஜ.க. டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியிடம் 2 வாக்காளர் அடையாள அட்டை இருப்பதை கண்டு தேர்தல் கமிஷன் அதிர்ச்சி அடைந்துள்ளது.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவில், தான் உதய் பார்க் பகுதியில் வசிப்பதாக கூறி உள்ளார். ஆனால், அவருக்கு 2 வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிரண் பேடி, உதய் பார்க் பகுதியை குறிப்பிட்டு, டி.இசட்.டி 1656909 என்ற எண் கொண்ட ஒரு அடையாள அட்டையும், தால்கதோரா சந்து பகுதியை குறிப்பிட்டு எஸ்.ஜே.இ 0047969 எண்ணுடன் வேறு ஒரு அடையாள அட்டையும் பெற்றிருக்கிறார். இது தேர்தல் கமிஷனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கிரண் பேடி தனது 2 அடையாள அட்டைகளில் ஒன்றினை ரத்து செய்ய விண்ணப்பிக்காமல் இருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. விரைவில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!