Published:Updated:

பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானம் மூலம் ஆயுதம் பெறும் தீவிரவாதிகள்? - போலீஸார் தீவிர விசாரணை!

கைது ( சித்தரிப்புப் படம் )

காலிஸ்தான் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 4 பேரை ஹரியானா மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானம் மூலம் ஆயுதம் பெறும் தீவிரவாதிகள்? - போலீஸார் தீவிர விசாரணை!

காலிஸ்தான் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 4 பேரை ஹரியானா மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

Published:Updated:
கைது ( சித்தரிப்புப் படம் )

ஹரியானா மாநிலம் கர்னாலில் காலிஸ்தான் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நான்குபேரும் பஞ்சாப்பைச் சேர்ந்த குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர், பூபிந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஹரியானா மாநில காவல்துறை, ``கைது செய்யப்பட்ட நான்குபேரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்ற சந்தேகம் உள்ளது. அது தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கைது
கைது

இவர்களிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 31 தோட்டாக்கள், 6 மொபைல் போன்கள், 1.3 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றியிருக்கிறோம். மேலும், இந்த நால்வருக்கும் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி ஹர்ஜிந்தர் சிங் ரிண்டாவால் என்பவர் ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்" எனத் தகவல் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தீவிரவாதிகள்
தீவிரவாதிகள்
சித்திரிப்புப் படம்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ``பாகிஸ்தானுக்குள் நுழைந்த ரிண்டா, மற்ற 'காலிஸ்தான்' தீவிரவாதிகளுடன் சேர்ந்து, பஞ்சாப்பில் பயங்கரவாதத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். மேலும், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்கள், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள். இவர்கள் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கும் ஹரியானா மாநிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

காவல்துறை
காவல்துறை

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை ஆறு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட நால்வரைத் தவிர, மற்ற இருவரும் பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism