Published:Updated:

சூனியம் வைத்துவிட்டதாக ஆத்திரம்; 4 பேரை மலத்தை உண்ண வைத்து, வாயில் சிறுநீரை ஊற்றிய கொடூரம்!

கைது

சில கிராமவாசிகள், 4 பேர் தங்களுக்கு சூனியம் வைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டி சூடான இரும்புக் கம்பியால் அவர்களை தாக்கியிருக்கின்றனர். மேலும், அந்த 4 பேரின் வாயில் சிறுநீரை ஊற்றி, அவர்களை மலத்தை உண்ண வைத்திருக்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா மாவட்டத்திலிள்ள அஸ்வரி கிராமத்தில் சில கிராமவாசிகள், 4 பேர் தங்களுக்கு சூனியம் வைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டி சூடான இரும்புக் கம்பியால் அவர்களை தாக்கியிருக்கின்றனர். மேலும், அந்த 4 பேரின் வாயில் சிறுநீரை ஊற்றி, அவர்களை மலத்தை உண்ண வைத்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உள்ளூர் போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``மாந்திரீகம், சூனியத்தில் ஈடுபட்டதாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேரை, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் இரும்புக் கம்பியால் தாக்கி அவர்களை கட்டாயப்படுத்தி மனித மலத்தை உண்ண வைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

சூனியம் வைத்துவிட்டதாக ஆத்திரம்; 4 பேரை மலத்தை உண்ண வைத்து, வாயில் சிறுநீரை ஊற்றிய கொடூரம்!

குறிப்பாக 3 பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில், எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு, ஆறு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.