Published:Updated:

அஸ்ஸாமில் கொட்டித்தீர்த்த மழை: வெள்ளத்தால் 42 லட்சம் பேர் பாதிப்பு; 71 பேர் உயிரிழப்பு

மீட்புப்பணியில் ராணுவம்

அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

அஸ்ஸாமில் கொட்டித்தீர்த்த மழை: வெள்ளத்தால் 42 லட்சம் பேர் பாதிப்பு; 71 பேர் உயிரிழப்பு

அஸ்ஸாமில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

Published:Updated:
மீட்புப்பணியில் ராணுவம்

அஸ்ஸாம் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த மூன்று நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன. மாநிலத்தில் 33 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் மழை வெள்ளத்துக்கு மூன்று குழந்தைகள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர். பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. 33 மாவட்டங்களிலும் மொத்தம் 42 லட்சம் பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். இன்னும் பலர் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நெடுஞ்சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அஸ்ஸாம் மழை
அஸ்ஸாம் மழை

மீட்புப் பணியில் பேரிடர் மேலாண்மை படையும், ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி 71 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் 5,137 கிராமங்கள் மழை வெள்ளத்தில் சிக்கியிருக்கின்றன. இதில் பார்பேடா மாவட்டம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெள்ளத்தில் சிக்கிய தாய்
வெள்ளத்தில் சிக்கிய தாய்

இங்கு மட்டும் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்ரங் மாவட்டத்தில் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா ஆற்றங்கரையோரம் இருக்கும் அனைத்துக் கிராமங்களும் நீரில் மூழ்கியிருக்கின்றன. பிரம்மபுத்திரா ஆற்றுப்பகுதியில் மட்டும் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்காக 30 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாம் மழை
அஸ்ஸாம் மழை

மாநிலம் முழுவதும் 744 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுவருவதாக மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கி, பிறகு மீட்கப்பட்டிருப்பவர்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ரஹிப் அகமத் இது குறித்துக் கூறுகையில், ``எங்களது வீடு கடந்த மூன்று நாள்களாக மழை வெள்ளத்தால் சூழ்ந்திருக்கிறது. நாங்கள் அனைத்தையும் இழந்து நெடுஞ்சாலையில் தங்கியிருக்கிறோம். மழை நிற்கவில்லையெனில் எங்களது நிலைமை மேலும் மோசமாகும். அரசிடமிருந்து எந்தவித நிவாரணப் பொருளும் எங்களுக்குக் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

அஸ்ஸாம் மழை
அஸ்ஸாம் மழை

மக்கள் சொற்ப உணவு தானியத்துடன் மழை வெள்ளத்தில் மீன்பிடித்து வாழ்ந்துவருகின்றனர். அதிகமான கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையவில்லை. உத்தம்நாத் என்ற மற்றொருவர் இது குறித்துக் கூறுகையில், ``நாங்கள் கடந்த ஐந்து நாள்களாக நெடுஞ்சாலையில்தான் தங்கியிருக்கிறோம். நிவாரணப் பொருள் என்று கூறி வெறும் அரிசியை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். எங்களது ஒட்டுமொத்த கிராமும் மூழ்கிவிட்டது. நீர்மட்டம் இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இன்னும் மழை பெய்தால் நிலைமை மேலும் மோசமடையும். இருக்கும் சொற்ப உணவு தானியத்துடன் மழை வெள்ளத்தில் பிடிக்கும் மீன்களை விற்று வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார். இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்துக்கு அஸ்ஸாமில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism