வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (25/03/2015)

கடைசி தொடர்பு:16:04 (25/03/2015)

பினாயிலுக்கு பதிலாக கோமியம்: மேனகா காந்தி அறிவுறுத்தல்!

புதுடெல்லி: ரசாயன முறைப்படி தயாரிக்கப்பட்ட பினாயிலுக்கு பதிலாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட கௌனில் பயன்படுத்துமாறு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.

மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவை மிகச் சிறந்த கிருமிநாசினி என்பதால்தான் நம் வீடு, வாசல்களுக்கு தெளித்து வரும் பழக்கம் இன்றும் கிராமங்களில் இருந்து வருகிறது. இதை ஏன் நாம் கழிவறைகளிலும் பயன்படுத்துக்கூடாது? என்று கையில் எடுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி.

அவர் அமைச்சர் குழுக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "இயற்கை கிருமி நாசினியாக செயல்படும் கௌனில் (Gaunyle) பயன்படுத்துங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

"இந்த கௌனில், வேதி ரசாயனங்களால் தயாரிக்கப்படும் பினாயில் போலவே நோய்த் தொற்று இல்லாமல் கழிவறைகள், தரைகளை பாதுகாக்கும். இதோடு சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது மாட்டுச் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது" என்று எழுதியுள்ளார். முதற்கட்டமாக "அமைச்சர்களின் அலுவலகங்களிலேயே பயன்படுத்துங்கள்" என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

ஹோலி கவ் பவுண்டேஷன் என்னும் தன்னார்வ அமைப்பு இந்த கௌனில்லை விற்பனை செய்து வருகிறது. இதில் எந்தவித செயற்கையான கலப்படங்களும் இல்லை. ஆனால், விலை குறைவாக கிடைக்கும் பினாயிலில் ரசாயன கலப்பு உள்ளது. அது சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது. மாட்டுச் சிறுநீர் குறித்து மேனகா காந்தி மட்டும் பேசவில்லை. மத்திய யோகா மற்றும் பாரம்பர்ய மருத்துவ துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் என்பவரும் பேசி வருகிறார்.

சாணம், கோமியம், நெய், தயிர், பால் ஆகிய 5 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகவ்யாவை இந்தியாவில் 7,835 அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத நிறுவனங்கள் தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார். மாட்டு சிறுநீரில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யாவின் மருத்துவ பயன்கள் குறித்து ஆயுர்வேத புத்தகங்களிலும் குறிப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

த. ஜெயகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்